முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயன்படுத்திய சட்டவிரோத ஜீப் வண்டி மீட்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயன்படுத்திய சட்டவிரோத ஜீப் வண்டி மீட்பு

புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஜீப் வண்டி ஒன்றின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவு இதனை கைப்பற்றியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவிற்கு சொந்தமான காணி மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இந்த வாகன பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்படும் போது குறித்த வாகன பாகங்கள் கடுமையாக சேதமடைந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This