நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் சபாநாயகரே பொறுப்பு – தயாசிறி எம்.பி

நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால், அதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால், சபாநாயகர் தான் பொறுப்பேற்க வேண்டும். “நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலர் சபாநாயகர். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு ஏதாவது நடந்தாலோ அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டாலோ அவர் பொறுப்பேற்க வேண்டும்.
எங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. ஆனால், எந்த துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இல்லை,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.