ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 244 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இந்த வெற்றியுடன் நான்கு புள்ளிகளுடன் இந்திய அணி குழு ஏ இல் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.