ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இங்கிலாந்து வீரர்கள் முன்னிலை

2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் குழு நிலை போட்டிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன.
குழுநிலை போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் முடிவில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இங்கிலாந்து அணியின் இரண்டு வீரர்கள் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
இதன்படி, பென் டக்கெட் மூன்றுப் போட்டிகளில் 227 ஓட்டங்களை குவித்து முதலிடம் பிடித்துள்ளார். 225 ஓட்டங்களை எடுத்த ஜோ ரூட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடத்தை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இப்ராஹிம் சத்ரான் பிடித்துள்ளார். அவர் மூன்றுப் போட்டிகளில் 216 ஓட்டங்களை குவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் டொம் லாதம் 187 ஓட்டங்களுடன் நான்காவது இடத்திலும், இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் 150 ஓட்டங்களுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.