நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார் மகிந்த

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார் மகிந்த

மக்களுடன் உணர்ச்சி ரீதியாக தொடர்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இனம், மதத்தைப் பொருட்படுத்தாமல், மக்களின் தலைவராகவும், உங்கள் அண்டை வீட்டாராகவும், உங்கள் நெருங்கிய நண்பராகவும் இருப்பதில் தான் பெருமை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களுடனே கழிந்துள்ளது. பதவிக்காலம் முடிவடையலாம், ஆனால் மக்களின் அன்பு என்பது பதவிக்காலத்தை விட அதிகமாகும். அது ஒரு போதும் முடிவதில்லை.

தான் ஆட்சியில் இருந்த போதிலும், ஆட்சியில் இல்லாத போதிலும் மக்களுன் என்னுடன் இருக்கின்றனர். கிராமத்தின் நட்பும் பிணைப்புகளும் எங்களுக்குப் பரிச்சயமானவை.

சிறு குழந்தைகளின் உரையாடல் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. இந்த உரையாடல் சுவாரஸ்யமானது. நான் அதை ரசிக்கிறேன்.
நாட்டு மக்களுடன் உணர்ச்சி ரீதியாக தொடர்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது.

நான் வந்த நாளிலிருந்து கார்ல்டன் வீட்டிற்கு வந்து என்னை ஆசீர்வதித்து வரும் மதிப்பிற்குரிய மகா சங்கத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நலனைப் பற்றி விசாரிக்க வந்த அன்பான மக்கள், அரசியல் சகாக்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், மக்களின் தலைவராகவும், உங்கள் அண்டை வீட்டாராகவும், உங்கள் நெருங்கிய நண்பராகவும் இருப்பதில் நான் பணிவாகவும் பெருமையாகவும் இருக்கிறேன்.” என அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This