முற்றிய வாக்குவாதம்…மனைவியைக் கொன்று படுக்கைக்குள் மறைத்து வைத்த கணவன்
டில்லியில் ஜனக்புரி பகுதியில் தன்ராஜ், தீபிகா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடந்த 3ஆம் திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு சென்றுள்ளது.
அப்போது பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது படுக்கைக்குள் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. குறித்த பெண்ணின் வாய் வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது.
பெண்ணின் உடலைக் கைப்பற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில், தன்ராஜ் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும் டெக்ஸி ட்ரைவராக பணிபுரிவதும் தெரிய வந்துள்ளது.
மேலும் உயிரிழந்த பெண் ஸ்பா ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். கணவன் – மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
பின் தீபிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார் தன்ராஜ். கடந்த 29 ஆம் திகதி கணவன் மனைவிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து படுக்கைக்குள் மறைத்து வைத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசி விடலாம் என்ற எண்ணத்துடன் நண்பர்களின் உதவியை நாடியுள்ளார். நண்பர்கள் மறுக்கவே, ஆக்ராவுக்கு தப்பிச் சென்று அங்கு பல இடங்களுக்கும் சென்றுள்ளார்.
மனைவியுடன் நெருங்கிப் பழகி வந்த ஆண் நண்பனையும் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் டில்லிக்குத் திரும்பியுள்ளார்.
தன்ராஜின் தொலைபேசியை ட்ரக் செய்த பொலிஸார் அவர் டில்லி திரும்பும் வழியில் மடக்கிப் பிடித்தனர்.
செய்த குற்றத்தையும் செய்யவிருந்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டார் தன்ராஜை பொலிஸார் கைது செய்தனர்.