இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, ‘‘அசுத்தமான குடிநீர் விநியோகம் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குடிநீர் குழாய்களிலிருந்து அசுத்தமான நீர் வருவதாக பகீரத்புரா மக்கள் கடந்த 08 மாதங்களாக முறைப்பாடளித்து வருகின்ற போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும்  மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை மாநில அமைச்சர் அநாகரிகமாகப் பேசியுள்ளதாவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அவர்  பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 11 ஆம் திகதி  போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )