
இலங்கையர்களை குறித்து வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட் மனித கடத்தல் நடவடிக்கை அம்பலம்!
மால்டாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, வெளிநாட்டில் நடத்தும் ஒரு பெரிய அளவிலான மனித கடத்தல் நடவடிக்கை குறித்து தகவல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ளது.
“துபாய் சுத்தா” என்ற நபர் தனது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் காணொளிகளை வெளியிட்டு இந்த மோசடியை முன்னெடுத்துள்ளார்.
மேலும் அவருக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பணியகம் தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது, மேலும் மோசடி செய்யப்பட்டவர்கள் யாராவது இருந்தால், விரைவில் முறைப்பாடு செய்யுமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.
1985 ஆம் ஆண்டு 21 ஆம் எண் கொண்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தின்படி, இலங்கைக்கு வெளியே வேலைவாய்ப்புக்காக ஆட்சேர்ப்பு, விளம்பரம், பணம் சேகரிப்பு, தகவல் சேகரிப்பு மற்றும் கடவுச்சீட்டு பெறுவதற்கு உரிமம் பெற வேண்டும்.
மேலும் உரிமம் இல்லாமல் இதுபோன்ற செயல்களைச் செய்வது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவுறுத்தலின் பேரில், இதுபோன்ற மனித கடத்தல்காரர்களை எதிர்த்துப் போராடுவதற்காக பணியகத்தில் ஒரு சிறப்பு காவல் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பிரிவுக்கு இதுபோன்ற ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
