
மட்டக்களப்பில் தீர்வின்றி தொடரும் யானை மனித மோதல் – ஒருவர் உயிரிழப்பு
மட்டு முனைக்காடு கிராமத்திற்குள் அதிகாலையில் புகுந்த யானையின் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று மக்கள் குடியுருப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்துள்ளது.
இதன்போது வீதியால் சென்றுகொண்டிருந்த யானை திடீரென மக்கள் மனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளது
அதிகாலை வேளையில் புகுந்த யானை வீட்டில் தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த பெண்களை எதிர்கொண்டு தாக்கியதுடன் காட்டு யானை தாக்குதலில்75 வயது மதிக்கதக்க பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பின் நகரம் கிராமம் என அனைத்து பகுதிகளிலும் யானைகளின் அட்டகாசம் முடிவின்றி தொடர்கிறது
