இந்திய மொழிகளை விழுங்கிய ஹிந்தி – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு

இந்திய மொழிகளை விழுங்கிய ஹிந்தி – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு

ஹிந்தி மொழியானது நிறைய இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“பிற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதர சகோதரிகளே,

ஹிந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது என என்றாவத சிந்தித்திருக்கிறீர்களா?

போஜ்புரி, ஆவ்தி, மகாஹி, குமோனி,ஹோ, காரியா, மார்வாரி, சத்தீஸ்கர்கி, பிரஜ், பந்தேலி என பல மொழிகள் உயிர் வாழ்வதற்காக மூச்சுத் திணறி வருகின்றன.

ஹிந்தி எனும் அடையாளம் பண்டைய தாய் மொழிகளைக் கொல்கிறது. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் கூட ஹிந்தியின் இதயப் பகுதிகள் அல்ல. அவற்றின் உண்மை மொழிகள் கடந்த கால நினைவச் சின்னங்களாக உள்ளன.

இது எங்கு சென்று முடியும் என்று எமக்கு தெரியும் என்பதால் தமிழ்நாடு ஹிந்தியை எதிர்க்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

Share This