காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

காணிப்பத்திரம் வழங்கும் ஹிமிகம தேசிய வேலைத்திட்டம் இன்று (13) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் காலை 09 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால்காந்த தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.
முதற்கட்டத்தின் கீழ் 50 ஆயிரம் காணிப்பத்திரங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை மகாவலி அதிகார சபை, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஊடாக அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வசிக்கும் இதுவரை எவ்வித உறுதிப்பத்திரமும் இல்லாத மக்களுக்கு அவற்றை வழங்குவதே இதன் நோக்கமாகும் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர், கலாநிதி சுசில் ரணசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டத்தை எதிர்வரும் சில ஆண்டுகளுக்கு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.