அசௌகரியத்தை ஏற்படுத்தும் விக்கல்…என்ன காரணம்?

மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதியான உதரவிதானம் சுவாசிப்பதற்கும் உணவானது வயிற்றுக்கு செல்வதற்கும் உதவி செய்கிறது. இந்த தசைப்பகுதி சுருங்கி விரியும்போதுதான் விக்கல் ஏற்படுகிறது.
விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்
சமிபாட்டுப் பிரச்சினை, கொழுப்புச் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், மாவினால் செய்த உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், வேகமாக சாப்பிடுதல், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் வீக்கம், உணவுக் குழாய் பாதிப்பு, இரைப்பை வீக்கம், இரத்தத்தில் இரசாயனக் கழிவுகள் தேங்குதல், கழுத்தருகில் ஏதேனும் கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும்.
விக்கல் ஏற்படும்பொழுது கண்கள் சிவந்து, கண்ணீர் வரும். மேலும் தொண்டை வறட்சியடையும். நெஞ்சுப் பகுதியில் ஒரு வித அடைப்பு ஏற்பட்டதைப் போல் இருக்கும். இது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தடுக்கும் முறை
தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் தண்ணீர் குடிக்கும்போது சுவாசிக்க மாட்டோம். எனவே உதரவிதான தசை இயல்பாக சுருங்கி விரிவது நின்றுபோகும்.
அதிர்ச்சியான விடயத்தை கேட்கும்பொழுது விக்கல் நின்றுவிடும்.
மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்தினால் விக்கல் நிற்கும்.
சீரகம், திப்பிலி இரண்டையும் வறுத்து தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.