தெற்கு கலிபோர்னியாவில் ஹெலிகாப்டர் விபத்து – ஐவர் படுகாயம்

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை அருகே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் அருகிலுள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த நேரத்தில் அவர்களில் மூன்று பேர் சாலையில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று கடற்கரைக்கு அருகில் விழா ஒன்று நடைபெற்றதாகவும், இதனால், கடற்கரையில் அதிகளவான மக்கள் நிரம்பியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரும் விழாவில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.