கொழும்பில் கனமழை – நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

கொழும்பில் கனமழை – நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

நாட்டில் சீர்ற்ற வானிலை தொடர்ந்துள்ள நிலையில், அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இதன்படி, ஆமர்வீதி மற்றும் மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள் அதிகளவில் நீரில் மூழ்கும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்தது.

நீரை வெளியேற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களே இந்த நிலைமைக்கான காரணமென கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மேலும் தெரிவித்தது.

இதேவேளை, அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில்
இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This