
கொழும்பில், பலத்த மழை பெய்யும் – பிபிசி வானிலை முன்னறிவிப்பு
அடுத்த சில நாட்களுக்கு இலங்கையில், குறிப்பாக கொழும்பில், பலத்த மழை பெய்யும் என்று பிபிசி வானிலை முன்னறிவிப்பு செய்துள்ளது.
பிபிசி வானிலை செய்தியாளரான லூயிஸ் லியர் கருத்துப்படி, வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகமூட்டம் இந்த வாரம் புயலாக உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளார்.
“இந்தப் புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரவுள்ளதாகவும், திங்கள்கிழமை பிற்பகுதியிலும் செவ்வாய்க்கிழமையும் இலங்கையின் சில பகுதிகளில் சில தீவிர மழை பெய்யும்” என்று லூயிஸ் லியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மழை பெய்யும் வானிலை இலங்கையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அவ்வப்போது சில நிலையற்ற கனமழையை நோக்கி நாடு நகர்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES இலங்கை
