
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் ஹமாஸ் – உளவுத்துறை தகவல்
ஹமாஸ் அமைப்பு பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமது செல்வாக்கை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஐஆர்ஜிசி எனப்படும் ஈரானின் நிழல் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் லெபனான் பினாமி படைகளான ஹெஸ்பொல்லா ஆகியவை ஹமாஸூக்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை அறிக்கை ஒன்றை கோடிட்டு பிரித்தானியா ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய இராஜதந்திர பணிகள், இஸ்ரேலிய தொடர்புகளைக் கொண்ட வணிகங்கள் அல்லது போரால் பாதிக்கப்பட்ட யூத அரசுடன் தொடர்புடைய மத தளங்களை குறிவைத்து இந்த விரிவாக்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைப்பதுடன், இந்தக் குழு ட்ரோன் போர் முறையிலும் தீவிரமாக விரிவடையத் தொடங்கியுள்ளது.
இந்தக் குழு லெபனான் மற்றும் ஈரானில் இருந்து ஆதரவைப் பெறுவதாகவும், கிழக்கு ஐரோப்பிய குற்ற வலையமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டு, கொடிய ஆயுதங்களை வாங்க உதவுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அதன் சொந்த தளமான காசாவில் அழிக்கப்பட்டிருந்தாலும், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி முன்னெடுக்கப்பட்டதெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஐரோப்பிய விரிவாக்கத்தைத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
ஹமாஸ் பல “ஆண்டுகளாக” ஐரோப்பா முழுவதும் முக்கியமாக இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள், ஹமாஸ் இயக்கும் சர்வதேச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் எதிர்வரும் காலங்களில் அதிகமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
