ஆயுதங்களை கைவிடப்போவதில்லை – ஹமாஸ் அறிவிப்பு

சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
2007 முதல் காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன.
இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படா விட்டால் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹமாஸ் தன்னிடமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதியை காண்பிக்கும் வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது.
எவியதார் டேவிட் என்ற பணயக்கைதியின் வீடியோவையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது,மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் அவர் ஒரு குழியை வெட்டுகின்றார் , இந்த குழி எனக்கானது என அவர் தெரிவிக்கின்றார்.
பணயக்கைதிகளும் பட்டினிகிடக்கின்றார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.