குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு – ஆனால், தோனி விடுவாரா?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு – ஆனால், தோனி விடுவாரா?

ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும்.

இதன் மூலம் ஐபிஎல் குவாலிபயர் 1 போட்டிகளை குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும். இப்படியான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.

நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் இந்த வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.

ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று அந்த அணி கடைசியாக விளையாடும் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தால் ஐபிஎல் 2025 தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றிருக்க முடியும்.

அந்த வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி இப்போது இழந்திருக்கிறது. இப்போது இந்த வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.

இன்று இரவு நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி 20 புள்ளிகளைப் பெற்று ஐபிஎல் 2025 புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.

ஆனால் குஜராத் அணியின் இந்த கனவு அவ்வளவு எளிதாக நிறைவேறி விட வாய்ப்பு இல்லை.

ஏனென்றால் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2025 தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது.

அப்படியான சூழலில் குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியை அவ்வளவு எளிதாக வென்று விட வாய்ப்பு இல்லை.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இருக்கும் ஒரே ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் இந்த போட்டி குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

சூழல் சாதகமாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அந்த அணி ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இப்போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறது.

13 போட்டியில் விளையாடி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது ஒரு வேளை இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நான்காவது வெற்றியாக அந்த அணிக்கு இருக்கும்.

அத்துடன் இந்த ஐபிஎல் போட்டியில் மிகக் குறைந்த வெற்றிகளை பெற்றிருக்கும் ராஜஸ்தான் அணிக்கு நிகரான வெற்றி பெற்று இருக்கிறோம் என்ற ஆறுதலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்காகவாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற கடினமாக முயற்சிக்கும்.

குஜராத் டைட்டன்ஸ் அணி இப் போட்டியில் தோற்றால், ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்காக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளின் கடைசி ஆட்டங்களின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றைய போட்டியில் தோற்று, பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் முறையே தங்களது கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த இரு அணிகளும் ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.

குவாலிஃபயர் முதல் சுற்றில் விளையாட வேண்டும் என்றால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்றைய போட்டி வெற்றி மிக மிக முக்கியமானது.

 

Share This