கிலான் பாரே சிண்ட்ரோம் – மூன்றாவது உயிரிழப்பு பதிவு

கிலான் பாரே சிண்ட்ரோம் – மூன்றாவது உயிரிழப்பு பதிவு

மராட்டிய மாநிலம் புனேயில் கிலான் பாரே சிண்ட்ரோம் எனும் நோய் தொற்று பரவி வருகிறது. இதுவரையில் சுமார் 130 பேர் இந் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் தசைகளை பலவீனமடையச் செய்து, உடல் பாகங்களை செயலிழக்கச் செய்யும். இந்த நோயினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு சோலாப்பூரில் பதிவாகியிருந்தது. அதேபோல் கடந்த புதன்கிழமை பெண்ணொருவரும் இந் நோயினால் உயிரழந்தார்.

இந்நிலையில் 36 வயதான டெக்ஸி ட்ரைவர் ஒருவரும் இந் நோய் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை மூன்றாவது உயிரிழப்பாக பதிவாகியுள்ளது.

குறித்த சாரதி இந் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் குறித்து பிம்பிரி சிஞ்வாட் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜி.எஸ்.பி தொற்றால் பாதிக்கப்பட்ட டெக்ஸி சாரதி உயிரிழப்பு குறித்து மருத்துவமனையில் நிபுணர் குழுவினர் விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபருக்கு ஏற்கனவே நிமோனியா இருந்ததும் தீவிர சுவாசப் பிரச்சினைக்கு ஆளாகியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

Share This