சொகுசு வாகனங்களை ஏலம் விடும் நடவடிக்கையில் அரசாங்கம்!

சொகுசு வாகனங்களை ஏலம் விடும் நடவடிக்கையில் அரசாங்கம்!

சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், எனினும் இதுவரையில் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.

ஆனால் அவர்களுக்கு எப்போது வாகனங்கள் வழங்கப்படும் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை.

அவர்களுக்காக புதிய வாகனங்களை கொண்டு வரமாட்டார்கள்.

இதுகுறித்து அரசாங்கம் பின்னர் பரிசீலிக்கும்” என கூறியுள்ளார்.

Share This