சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண்பதற்கு புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பிற்காக மக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 076 6412029 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு சுற்றுச்சூழல் பிரச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பலாம்.

சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்தப் பிரச்சினைகளை தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பி, விரைவான மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொடர் செயன்முறை மூலம் விசாரணைகளை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை,எண்ணுக்கு சுற்றுச்சூழல் பிரச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பலாம்.

CATEGORIES
TAGS
Share This