தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்யும் தங்கத்தின் விலை

தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்யும் தங்கத்தின் விலை

தமிழகத்தின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபா உயர்வடைந்துள்ளது.

இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை 79 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு 70 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் தங்கம் 9,865 ரூபாவுக்கும் பவுனுக்கு 560 ரூபா உயர்வடைந்து ஒரு பவுன் தங்கம் 78,920 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 136 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,36,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.

கடந்த 26 ஆம் திகதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.

தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 09 நாட்களில் பவுனுக்கு
4,000 ரூபாவுக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது.

Share This