கெரண்டி எல்ல விபத்து – விசாரணைக்கு சிறப்பு பொலிஸ் குழு நியமனம்

கெரண்டி எல்ல விபத்து – விசாரணைக்கு சிறப்பு பொலிஸ் குழு நியமனம்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்து குறித்து சிறப்பு விசாரணை நடத்த பொலிஸ் திணைக்களம் ஒரு குழுவை நியமித்துள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையிலான இந்தக் குழுவில், மேலும் நான்கு மூத்த பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமத்தில் இருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கிச் சென்ற அரச பேருந்து அதிகாலையில், பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில், விபத்து சாரதியின் கவனயீனத்தால் ஏற்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This