கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை – ஆயுதத்தை வழங்கிய பெண் யார்?

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல வந்த துப்பாக்கித்தாரிக்கு சட்டத்தரணி போல் வேடமணிந்த பெண்ணொருவர் ஆயுதத்தை வழங்கியமை தற்போது தெரியவந்துள்ளது.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கணேமுல்ல சஞ்சீவ வெளியேறவிருந்த போது இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.