கேரளாவில் கல்லூரி மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – இருவர் உயிரிழப்பு

கேரளாவின் இடுக்கி மாவட்டம், மூணாறில் நாகர் கோவிலிருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் எக்கோ பொயிண்ட் அருகில் அதிகவேகமாக சென்ற பஸ் வளையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதில் 30 இற்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.