G7 உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

G7 உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்திர G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் இன்று (16) ஆரம்பமாகிறது.

மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் G7 உச்சி மாநாடு இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும்.

ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, உக்ரைன் மற்றும் இந்தியாவின் தலைவர்களும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் காலநிலை நடவடிக்கை உள்ளிட்ட உலகம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )