ஜனாதிபதி அநுரவின் பதவி காலத்தில் எரிபொருள் விலை 17 முதல் 39 ரூபா வரை குறைப்பு

ஜனாதிபதி அநுரவின் பதவி காலத்தில் எரிபொருள் விலை 17 முதல் 39 ரூபா வரை குறைப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் எரிபொருள் விலை 17 முதல் 39 ரூபா வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஊடகங்களிடம் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடையும் வேளையில், எரிபொருள் விலைகள் மற்றும் பிற பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக் குறைப்பு மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது என்றார்.

தரவுகளின்படி, 2024 ஒகஸ்ட் 31 மற்றும் 2025 ஒகஸ்ட் 31க்கு இடையில், லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றி விலை 36 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

லங்கா ஓட்டோ டீசலின் விலை லிட்டருக்கு 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சூப்பர் டீசலின் விலை 39 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This