மியன்மார் நிலநடுக்கம் – 1700 பலி, மீட்பு பணிகள் தீவிரம்

மியன்மார் நிலநடுக்கம் – 1700 பலி, மீட்பு பணிகள் தீவிரம்

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 1700 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவத் தலைவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவானது.

தாய்லாந்திலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் பேங்கொக்கில் உயரமான கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் காணாமற்
போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் மண்டலே நகரிற்கு அருகே 5.1 ரிக்டர் அளவில் புதிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மாரின் ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை தென்கிழக்கு ஆசிய நாட்டை உலுக்கியது.

இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 3,408 பேர் காயமடைந்துள்ளனர்.

மியன்மாரில் பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட முக்கியமான உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மார் மற்றும் தாய்லாந்தில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பேரழிவைத் தடுப்பதில் மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை தடையாக இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

 

Share This