ஓடு பாதையில் திடீரென நுழைந்த நரி!! கொழும்பில் இருந்து சென்ற விமானம் மயிரிழையில் தப்பியது

இலங்கையில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற Fits Airlines விமானம் தரையிறங்கும் போது நரி ஒன்று ஓடுபாதையில் நுழைந்தமையால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பங்களாதேஷின் ஹஸ்ரத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதிகாலை இரண்டு மணிக்குப் பின்னர் சிறிது நேரத்தில் தரையிறங்கியது.
எனினும், நரி திடீரென ஓடுபாதையில் ஓடி தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், விமானியின் விரைவான செயற்பாடு மற்றும் தொழில்நுட்பத் திறன் காரணமாக விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமான நிலைய ஊழியர்கள் விலங்கை அகற்றியுள்ளனர். அத்துடன், விமானம் ஓடுபாதையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.
பல விமான நிலைய அதிகாரிகள் சம்பவத்தை உறுதிப்படுத்தினர். அத்துடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து பாரிய விபத்தைத் தடுக்க எடுத்த முயற்சியைப் பாராட்டினர்.