நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, மஹியங்கனை, பெல்மடுல்ல, தெஹியோவிட்ட மற்றும் கட்டுகஸ்தொட்டை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
கட்டுகஸ்தொட்டையில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்
அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது.
பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 59 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – ஹெட்டன் வீதியின் தெம்பிலியான பகுதியில் பஸ் வண்டியின் கதவு திறப்பட்டு அதில் அடிபட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் பாதகந்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மாடொன்றின் மீது மோதி பின்னர் மோட்டார் வண்டி மீது மோதியுள்ளது. இதன்போது 63 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்துடன் மோதியதில் 37 வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.