தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மறைவு – ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மறைவு – ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை காலமானார்.

குளியலறையில் கால் தடுக்கி கீழே விழுந்ததால் தலையிலுள்ள நரம்பொன்று பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

தற்போது 82 வயதாகும் இவரின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேனாதிராஜாவின் பூதவுடன் அரசடி வீதிஈ, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சேனாதிராஜாவின் உடலை அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொறுப்பேற்றுள்ளதோடு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This