தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-யியோல் இரண்டு மாத தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி 15 அன்று இராணுவச் சட்டத்தை அறிவித்ததற்காக யுன் கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் நேற்று யூனை இனி தடுப்பு காவலில் வைக்க முடியாது என்றும் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் முடிவு செய்ததை அடுத்து, யூனின் விடுதலை சாத்தியமானது.
சிறையில் இருந்து விடுதலையான யுன், விசாரணை அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்திய நீதிமன்றத்தின் துணிச்சலையும் உறுதியையும் பாராட்டினார்.