அரச மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிகாம்போத்கோட் வரை இறுதி பேரணி நடைபெற்றது.
இறுதி நிகழ்வாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போன்றேர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின் அரச மரியாதையுடன் அவரது குடும்ப முறைப்படி யமுனை நதிக்கரை அருகில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.