லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் ரணில்

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி தற்போது சாட்சியமளித்து வருவதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சமப்த தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக விக்கிரமசிங்க வாக்குமூலம் வழங்க அவர் ஆணையத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )