மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இறுதி அஞ்சலி

மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் இன்று (25) தங்களது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி மண்டபத்தில், மாலினி பொன்சேகாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த மாலினி பொன்சேகாவின் உடல் இன்று (25) காலை பொது மக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள் நாளை (26) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.