ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் கைது

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (SLRC) இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியமர்த்தி, அதற்கான கொடுப்பனவுகளை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு 14.32 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )