
யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது
இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
TAGS Jaffna NewsJaffna Tamil NewslkaSri Lanka Tamil NewsTamil Newsஇலங்கை தமிழ் செய்திகள்இலங்கைச் செய்திகள்ஒருவன்ஒருவன் செய்திகள்யாழ்ப்பாணச் செய்திகள்
