வெளிநாட்டு வேலைவாய்ப்பு – 35 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 35 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான வேலை வேலைவாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து, ஒருவரிடம் இருந்து 12 தொடக்கம் 15 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் ஹட்டன் பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்திலும் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதில் 12 பேர் துபாய் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்த சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.