இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் உணவகப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாயால் அதிகரிக்கப்படுகின்றன.

அத்துடன், அனைத்து வகையான சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாயாலும், தேநீர் மற்றும் காபி உள்ளிட்ட பானங்களின் விலைகள் 5 ரூபாயாலும் உயர்த்தப்படவுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டமையால், உணவகங்களை நஷ்டமின்றித் தொடர்ந்து நடத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )