படகு கவிழ்ந்ததில் மீன்பிடிக்க சென்றவர் பலி

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்துவாரம் பகுதியில் இருந்து இயந்திர படகு ஒன்றில் நேற்றிரவு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
மீண்டும் கரைப்பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது படகு திடீரேன கவிழ்ந்ததையடுத்து ஒருவர் காப்பாற்றப்பட்டதுடன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
திராய்மடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.