நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை
தமிழகத்தின் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை
கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறி உள்ளது.
இது மேலும் வலுவடைந்து டெல்டா கரையை நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.