மஸ்கெலியாவில் தொடர் குடியிருப்பில் தீ விபத்து – எட்டு வீடுகள் எரிந்து நாசம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
12 வீடுகள் கொண்ட குடியிருப்பில் பரவிக்கொண்டிருந்த தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளில் இருந்த தனிப்பட்ட உடைமைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.