நாரஹேன்பிட்ட பகுதியில் வீடொன்றில் தீவிபத்து

நாரஹேன்பிட்ட பகுதியில் வீடொன்றில் தீவிபத்து

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Share This