
நிதியமைச்சர் பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை – கெய்ர் ஸ்டார்மர்
வரவு செலவுத்திட்ட வாசிப்புக்கு முன் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையை மீற வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றதா என்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்ததையும் பிரதமர் இதன்போது ஒப்புக்கொண்டார்.
எவ்வாறாயினும் அதனை மீறாமல் இலக்குகளை அடைய முடியும் என்பது தெளிவானதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சாதாரண பயன்பாடுகளுக்கான வரவு செலவுத்திட்டம் இதுவென குற்றம் சுமத்திய கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி படேனோக், ரேச்சல் ரீவ்ஸ் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES உலகம்
