
மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு
மதவாச்சி, கடவத்தகம பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார்.
மூத்த மகன் மேற்கொண்ட தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனது தந்தை தலையில் காயங்களுடன் வீட்டின் முற்றத்தில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் கிடப்பதை,
அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் இளைய மகன் கண்டுள்ளார்.
உயிரிழந்தவர் மூத்த மகனுடன் மது அருந்தியுள்ளதாகவும், ஏற்பட்ட தகராறின் காரணமாக மகன் மரக்கட்டைத் துண்டால் தாக்கி
இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 42 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர் கடவத்தகம, மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
