யாழில் கோர விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை வைத்தியசாலையிலிருந்து கீரிமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவத்தில் தெல்லிப்பழையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதி கனரக வாகனத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்துச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
