மட்டக்களப்பில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 15 வயது சிறுமி ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது மைல்கல் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதிய விபத்தில், காரை செலுத்திய சாரதி மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பமவ் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை 4.45 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய் மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.