திருகோணமலையில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலையில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முத்து நகர் பகுதியில் உள்ள விவசாய காணிகளை சூரிய மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்க வேண்டாம் என கோரி குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முத்து நகர் ஒன்றிணைந்த அனைத்து விவசாய சம்மேளனங்கள் மேய்கொண்டிருந்தனர்.

குறித்த முத்து நகர் பகுதியில் ஐந்து சிறு குளங்களை கொண்ட 1600ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 1200 விவசாயிகள் விவசாய
செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடத்தில் வாரி சௌபாக்கியா திட்டத்தின் கீழ் அரசாங்கம் குளங்களை திருத்த நிதி ஒதுக்கீடு செய்தது. தகரவெட்டுவான் குளம் 80 வீதம் திருத்தப்பட்ட நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையால் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, அம்மன் குளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு திருத்தம் செய்ய அனுமதியை மறுத்து தடுத்து நிறுத்தியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

Share This