
சுவிட்சர்லாந்தில் நடந்த வெடிப்பு சம்பவம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
புத்தாண்டின் முதல் நாளில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் ஸ்கை சொகுசு ரிசார்ட்டில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.
இதில் பலர் உயிரிழந்திருக்காம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு பொலிஸார், வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்று தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாக அவர்கள் உறுதிப்படுத்தினர்.
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா ஸ்கை ரிசார்ட்டில் உள்ளபாரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
மேலும், பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி 01:30 மணிக்கு (00:30 GMT) கான்ஸ்டலேஷன் பாரில் வெடிப்பு நிகழ்ந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் உறுதிப்படுத்தப்படாத காட்சிகள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த பார் தீப்பிடித்து எரிவதைக் காட்டுகின்றன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான்ஸ்-மொன்டானா என்பது சுவிஸ் தலைநகர் பெர்னிலிருந்து சுமார் இரண்டு மணி நேரம் தொலைவில் உள்ள சுவிஸ் ஆல்ப்ஸின் மையப்பகுதியில் உள்ள ஒரு அழகிய ஸ்கை ரிசார்ட் நகரமாகும்.
