மீகொடயில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

மீகொடயில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

மீகொட பகுதியில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ உயிரிழந்துள்ளார்.

எடிகல பகுதியில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இன்று பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

காரில் வருகைத்தந்த சிலரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காயமடைந்த் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 46 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This